தமிழ் இடம்பெறாமல் இருப்பது ஏற்புடையதல்ல – தினகரன்

மத்திய அரசு அளித்திருந்த வாக்குறுதியின்படி தமிழிலும் அஞ்சல் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

அஞ்சல்துறைக்கான அக்கவுன்டன்ட் பதவிகளுக்கான தேர்வு வரும் பிப்ரவரி 14 -ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தது.எனவே அடுத்தமாதம் நடைபெறவுள்ள அஞ்சல்துறைக்கான தேர்வு அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அஞ்சல்துறைக்கான மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம் பெற்றுள்ளது.இதனால்அஞ்சல்துறை தேர்வுகளை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,  அஞ்சல் துறை தேர்வுகளுக்கான மொழிகளின் பட்டியலில் தமிழ் இடம்பெறாமல் இருப்பது ஏற்புடையதல்ல.ஏற்கனவே இது தொடர்பாக மத்திய அரசு அளித்திருந்த வாக்குறுதியின்படி தமிழிலும் அஞ்சல் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். எனவே, இதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை திருத்தம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.