திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல – சென்னை உயர்நீதிமன்றம்

  • கோவை மாவட்டத்தில் ஒரு தனியார் ஹோட்டலில் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் , பெண்ணும் தங்கி இருந்ததால் எந்தவித முன்னறிவிப்புமின்றி முடியாது ஹோட்டல் மூடப்பட்டது.
  •  திருமணம் ஆகாத தம்பதிகள் சேர்ந்து வாழ்வது எந்தவித குற்றமும் இல்லை.
  • அப்படி இருக்கும்போது  திருமணமாகாத  ஆணும் ,பெண்ணும் ஒரே விடுதியில் ஒரே அறையில் இருந்தால் எப்படி குற்றமாகும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

கோவை மாவட்டத்தில் ஒரு தனியார் ஹோட்டலில் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் , பெண்ணும் தங்கி இருந்ததாலும் , மற்றோரு அறையில் மதுபானம் பாட்டில்கள் இருந்ததாலும் அந்த தனியார் ஹோட்டலை  போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடியது.

இதனை எதிர்த்து அந்த ஹோட்டலின் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம். எஸ் ரமேஷ் முன்னணியில் விசாரணைக்கு வந்தது.அப்போது திருமணமாகாத ஆணும் ,பெண்ணும் ஒரே அறையில் தங்க கூடாது  என்று எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை.

அதே போல திருமணம் ஆகாத தம்பதிகள் சேர்ந்து வாழ்வது எந்தவித குற்றமும் இல்லை. அப்படி இருக்கும்போது  திருமணமாகாத  ஆணும் ,பெண்ணும் ஒரே விடுதியில் ஒரே அறையில் இருந்தால் எப்படி குற்றமாகும் .

அந்த விடுதியில் அறை மதுபாட்டில் கிடைத்ததால் மட்டும் அவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறிவிட முடியாது.எனவே மூடப்பட்ட விடுதியை ஆணை கிடைத்த 2 நாள்களில் மாவட்ட ஆட்சியர் மீண்டும் திறக்க வேண்டுமென உத்தரவு விட்டார்.

author avatar
murugan