ஆயுதப்பூஜைக்கு 500க்கு அதிகமான பேருந்துகள்-போக்குவரத்து துறை திட்டவட்டம்!

ஆயுதப்பூஜைக்கு 500க்கு அதிகமான பேருந்துகள்-போக்குவரத்து துறை திட்டவட்டம்!

ஆயுதபூஜைக்கு வெளியூர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துதுறை  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அரசு பேருந்துகள் கடந்த 6 மாதமாக இயக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் ஊரடங்கு  தளர்வுகளுக்கு பிறகு மீண்டும்  இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு தலைநகர் சென்னையில் மட்டும் 2500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போல் வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளின்  வசதிக்காக 600 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அக்.,25ம் தேதி ஆயுதபூஜை நாடு முழுவது கொண்டாடப்படுகிறது. அக்.,26 விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. அக்.,24 சனிக்கிழமை என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக வருகிறது என்று பலரும் அக்.,23ந்தேதியே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல  திட்டமிடுவார்கள். குறிப்பாக நீண்ட தூரம் செல்ல விரும்பும் பயணிகள் இதில் அதிகமாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

மேலும் ஆம்னி பேருந்துகளை இயக்குவது  குறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.அதே போல் ரயில் போக்குவரத்தும் கனிசமாக இல்லை. சிறப்பு  ரயில்கள் மட்டும்தான் தற்போது இயக்கப்பட்டு  வருகிறது.இதனால் மக்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளை நம்பித்தான் பயண செல்ல வாய்ப்புள்ளது.

இவர்களின் வசதிக்காக சிறப்பு  பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்நிலையில் கோரிக்கைகளை ஏற்ற போக்குவரத்து கழக அதிகாரிகள்   நீண்ட தூர சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு  ஆலோசித்து வருவதாக தெரிவித்தனர்.

இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில்: ஊரடங்கு தளர்வுக்கு பின் பேருந்துகள் இயக்கப்படுகிறது. குறைவான பயணிகளே முதலில் பயணித்தனர். ஆனால் தற்போது எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில் அக்.,25ந்தேதி ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளதால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்குவது  ஆலோசனை நடத்தி வருகிறோம். பயணிகளின் வருகையை பொறுத்து அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட சிறப்பு  பேருந்துகளை இயக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். பயணிகள் முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in என்ற  இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.



author avatar
Kaliraj
Join our channel google news Youtube