குஜராத் சட்டமன்ற தேர்தல் : முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்த ஆம் ஆத்மி.!

குஜராத் சட்டமன்ற தேர்தல் : முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்த ஆம் ஆத்மி.!

குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் இசுதான் காத்வி என்பவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

குஜராத் சட்டமன்ற தேர்தல்  மொத்தம் 182 தொகுதிகளில் வரும் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2ஆம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் முதற்கட்ட தொகுதிகளுக்கு நவம்பர் 5ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 10ஆம் தேதியும் தொடங்க உள்ளது.

இந்நிலையில், டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, குஜராத்தில் தனது கட்சியின் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளனர்.

அதன் படி ஆம் ஆத்மி சார்பில் 40 வயதே ஆன இசுதான் காத்வி என்பவரை குஜராத் சட்டமன்ற தேர்தல் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *