ஆர்பிட்டர் ஆராய்ச்சிக்களை சிறப்பாக செய்து வருகிறது! இஸ்ரோ டிவிட்டரில் தகவல்!

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்களத்தை விண்ணில் செலுத்தியது. அதில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஆர்பிட்டரில் இருந்து, தென்துருவ நிலவின் தரைப்பகுதியை ஆராய விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது.

அப்போது நிலவின் தரையினை நெருங்குகையில் விக்ரம் லேண்டர், இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் லெண்டருடனான தொடர்பை மீட்க இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர்.

தற்போது இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ திட்டமிட்டபடி நிலவின் மீதான ஆராய்ச்சியில் நிலவின் சுற்றுவட்டபாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விக்ரம் லேண்டருடனான தொடர்பை பெற ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். என பதிவிடப்பட்டிருந்தது.

விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நாளை முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.