உலக வல்லரசுகளுக்கு இணையாக விண்வெளியில் கலக்க இருக்கும் இந்தியா.. நான்கு வீரர்கள் தேர்வு.. பயிற்சிக்கும் தயார்..

உலக வல்லரசுகளுக்கு இணையாக விண்வெளியில் கலக்க இருக்கும் இந்தியா.. நான்கு வீரர்கள் தேர்வு.. பயிற்சிக்கும் தயார்..

  • கடந்த 2018 ஆகஸ்ட் 15ம் நாள் இந்திய  பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின் போது ககன்யான் திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
  • இதற்காக நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிர்ச்சிக்கு ரஷ்யா பயணம்.
      இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு   4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது.
இந்த திட்டத்தை இந்தியா சிறப்பாக நிறைவேற்ற  ரஷியாவும் உதவ முன்வந்துள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே ரஷிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைமை இயக்குனர் டிமிட்ரி ரோகாசின், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் மாஸ்கோவில் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ககன்யான் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ .10,000 கோடி ஒதுக்கியுள்ளது.
Image result for gaganyaan mission
இதில், விண்வெளிக்கு செல்லும் 4 இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு   அவர்களுக்கு ரஷியாவின் யூரி ககாரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களும் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்த முடியாது என்று விண்வெளித் துறை  தெரிவித்துள்ளது. அந்த நான்கு விண்வெளி வீரர்களும் 11 மாதங்களுக்கு அங்கு  பயிற்சி பெறுவார்கள்.அவர்களின் பயிற்சி வரும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும்.இவர்கள், இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட்டான   ஜிஎஸ்எல்வி மார்க் -3 ராக்கெட்டில், விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு கொண்டு செல்ல இருக்கிறது.