இஸ்ரேல் தூதரகம் குண்டுவெடிப்பு: சி.சி.டி.வியில் 2 நபர்கள்..!

தலைநகர் டெல்லியின் மிகவும் பாதுகாப்பான லுடீயன்ஸ் மண்டல பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே நேற்று மாலை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து,  டெல்லி பொலிஸ் சிறப்புப் பிரிவின் குழு இன்று காலை இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே உள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை, ஆனால் தூதரகத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன.

இந்த சம்பவம் இந்தோ-இஸ்ரேலிய தூதரக உறவுகளின் 29 வது ஆண்டு நினைவு நாளில் நடந்தது. ஆரம்ப விசாரணையில் இந்த வெடிகுண்டு குறைந்த திறன் கொண்டது என தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்புக்கு பின்னால் எந்த பயங்கரவாத அமைப்பும் இல்லை என்று டெல்லி காவல்துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுடன், மத்திய புலனாய்வு அமைப்புகளும் விசாரணை தொடங்கியுள்ளன. வெளியுறவு அமைச்சர் எஸ்.கே. ஜெய்சங்கர் இஸ்ரேல் வெளியுறவு மந்திரி காபி அஷ்கெனாஜியுடன் பேசினார் மற்றும் குற்றவாளிகள் மற்றும் தூதரக பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்நிலையில், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, இஸ்ரேலிய தூதரகம் அருகே 2 நபர்கள் சம்பவ இடத்திற்குச் செல்லும்  சிசிடிவி காட்சிகளைப் பார்த்துள்ளனர்.

author avatar
murugan