ஜெர்மன் ஏர்பஸ் தொழிலாளர்கள் 500 பேர் தனிமைப்படுத்தல்!

ஜெர்மன் ஏர்பஸ் தொழிலாளர்கள் 500 பேர் தனிமைப்படுத்தல்!

ஜெர்மனிலுள்ள பிரபல ஏர்பஸ் நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய 21 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு பணியாற்றிய 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். 

கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா வைரஸின் தாக்கத்தில் உலகிலுள்ள பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், பல கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக புதிய கொரோனா வைரஸும் சேர்த்து மக்களை பாடாய் படுத்துகிறது. எனவே ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் மிக எச்சரிக்கையுடனும், கட்டுப்பாடுகளுடனும் தான் மக்கள் வெளியில் நடமாடுகின்றனர்.

ஆனால், ஜெர்மனிலுள்ள பிரபல நிறுவனமாகிய ஏர்பஸ் நிறுவனத்தின் கீழ் பணியாற்றக்கூடிய 21 தொழிலாளர்களுக்கு புதியவகை கொரோனா வைரஸின் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பணியாற்றிய 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். தங்கள் பரிசோதனை செய்தவர்களை தான் அனுமதித்து பல சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் அந்நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், கொரோனா பரவலுக்கான காரணம் தங்களுக்கு தெரியவில்லை என சுகாதார அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube