வீட்டில் தனிமைப்படுத்துவது ரத்து – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.!

கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இனி அரசின் முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு – மாநகராட்சி ஆணையர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவதை முழுமையாக ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். அப்போது, வைரஸ் தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துதலை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் முகாமிற்கு அழைத்து செல்லப்படுவர் என்று தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 10 அல்லது 15 நாட்கள் முகாமில் தங்கவைத்து வீட்டிற்கு அனுப்பப்படுவர். இந்நிலையில், கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இனி அரசின் முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்