தேசிய விருது பெற்ற இயக்குநருடன் கைக்கோர்க்கிறாரா விஜய் ஆண்டனி.!

தேசிய விருது பெற்ற இயக்குநருடன் கைக்கோர்க்கிறாரா விஜய் ஆண்டனி.!

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநரான பிரியா கிருஷ்ணாசாமி இயக்குவதாக கூறப்படுகிறது.

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார்.சமீபத்தில் இவர் மெகா ஹிட் படமான பிச்சைக்காரன் படத்தின் கதையை எழுதி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. 2016ல் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து தயாரித்த திரைப்படம் தான் பிச்சைக்காரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளான ஜூலை 24 அன்று அவரது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் போஸ்ட்ர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இவரது அடுத்த படம் பிச்சைக்காரன் 2 ஆக இருக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இவரது அடுத்த படத்தினை தேசிய விருது பெற்ற இயக்குநர் ஒருவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், பிரியா கிருஷ்ணாசாமி என்பவர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் 2018ல் "பாரம்" என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி உண்மையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.