அடுத்த படத்திற்காக லோகேஷ் கனகராஜூக்கு இத்தனை கோடி சம்பளமா.?

அடுத்த படத்திற்காக லோகேஷ் கனகராஜூக்கு இத்தனை கோடி சம்பளமா.?

லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த தெலுங்கு படத்திற்கு மாஸ்டர் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை விட நான்கு மடங்கு அதிகம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்,பிளாக் பஸ்டர் ஹிட்டான கைதி படத்தின் மூலம் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். சிறிய பட்ஜெட்டில் பிளாக் பஸ்டர் படங்களை கொடுப்பவர். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் கோலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டரை அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் ஒன்றை இயக்க போவதாகவும், "தலைவர்169" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது லோகேஷ் தெலுங்கின் முன்னணி நடிகர் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகவும், அதனை மைத்ரி மூவீ மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும்,இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்காக வாங்கிய சம்பளத்தை விட நான்கு மடங்கு அதிக சம்பளம் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்திற்காக 1.5 கோடி வாங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் அட்வான்ஸாக 1. 5 கோடி ரூபாய் வாங்கிவிட்டாராம். அப்போது படத்திற்காக மொத்த சம்பளம் 1.5கோடியை விட நான்கு மடங்கு என்று கூறப்படுகிறது.

Latest Posts

பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் - இணையத்தை கலக்கும் வீடியோ!
நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் - சீமான்!
தந்தை ,மகன் கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ
பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!
#BREAKING: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்.. ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை..!
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!
70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் - இந்தியா பதிலடி