இது கௌதம் மேனன் படம்தானா.?! மிரட்டும் தோற்றத்தில் சிம்பு.! வெந்து தணிந்தது காடு.!

இது கௌதம் மேனன் படம்தானா.?! மிரட்டும் தோற்றத்தில் சிம்பு.! வெந்து தணிந்தது காடு.!

சிம்புவின் 47- வது படத்திற்கு “வெந்து தணிந்தது காடு” என்று வைக்கப்பட்டு அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளை இசையுடன் சேர்ந்து ரசிகர்களுக்கு எப்போதும் ரசிக்கும்படி படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குனர் கெளதம் மேனன். இவரது இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த இரண்டு திரைப்படங்கள் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா.

இந்த இரண்டுதிரைப்படங்களுக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் துல்லியமான இசையில், அற்புதமான பாடல்களை கொடுத்திருந்தார். இந்த இரண்டு படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி இணைந்து ஒரு திரைப்படம் எடுக்கப்படவுள்ளதாகவும், இந்தபடத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் வைக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்த பட அறிவிப்பு வெளியாகி மாதங்கள் கடந்தும் படத்திற்கான ஷூட்டிங் மற்றும் மற்ற வேலைகள் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் தலைப்பு மாற்றம் செய்யப்பட்டு தலைப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மதியம் 12.15க்கு வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

அதன் படி தற்போது இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு “வெந்து தணிந்தது காடு” என்று வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு உள்ளார். இதனை நடிகர் சிம்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கு காதலை மையமாக வைத்து படங்களை கொடுத்து வந்த இயக்குனர் கெளதம் மேனன் தற்போது வித்தியாசமாக படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.

போஸ்ட்டரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்றே கூறலாம். இந்த படத்தை ஐசரி கணேசன் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube