பாதாம் பால் குடிப்பதால் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படுமா?

பாதாம் பால் குடிப்பதால் இவ்வளவு ஆபத்துகள் ஏற்படுமா?

பாதாம் பாலை பொறுத்தவரையில், பசும் பாலை விட மிகவும் சுவையுடையதாக காணப்படும். இந்த பாலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த பாலை விரும்பி குடிப்பதுண்டு. பாதம் பாலில் புரதங்கள், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் முக்கியமான சத்துக்கள் பல உள்ளது.
இந்த பாலில் பல நன்மைகளை தரக் கூடிய சக்தி உள்ளது என்றாலும், இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய சில விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எண்ணெயால், பாதாம் ஒவ்வாமை கொட்டைகளில் பட்டியலில் ஒன்றாக கருதப்படுகிறது.

அலர்ஜி

நட்ஸ் அலர்ஜி உள்ளவர்கள் பாதாம் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் முகத்தில் வீக்கம், குமட்டல் மற்றும் வயிற்றுப போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பாடாகி கூடும் என்பதால், இதனை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பாலை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த பாலை குடிப்பதால், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து, உடல் ஆரோக்கியததாகி பெரிதளவில் பாதிக்கிறது.

மூச்சுத்திணறல்

இந்த பாலில் சத்துக்கள் உள்ளது என்று கருதினாலும், இந்த பாலை குடிப்பதால் மூச்சு திணறல், சுவாச பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆஸ்துமா

ஆஸ்துமா நோய் பிரச்னை உள்ளவர்கள் இந்த பாலை குடிப்பதால், அது நோயின் தீவிரத்தை  அதிகரிக்க செய்து, உடல் ஆரோக்கியத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது. மேலும், சளி தொல்லை உள்ளவர்கள் இந்த பாலை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube