இப்படியெல்லாம் ஆபத்து உள்ளதா? தேநீர் பிரியர்களே! இந்த பதிவு உங்களுக்காக தான்!

இப்படியெல்லாம் ஆபத்து உள்ளதா? தேநீர் பிரியர்களே! இந்த பதிவு உங்களுக்காக தான்!

தேநீர் அல்லது காப்பி அருந்துவதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீரை அருந்துவது மிகவும் அவசியம். இவ்வாறு தண்ணீர் குடிப்பதால் என்ன பயன்?

நம்மில் பலரும் காலையில் எழுந்த உடனேயே தேநீர் அல்லது காப்பி அருந்துவது  வழக்கமாக உள்ளது. அவ்வாறு அருந்தாவிட்டால் அன்றைய நாளே மிகவும் சோர்வான நாளாக நாம் எண்ணிக் கொள்வதுண்டு. காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை ஏதாவது ஒரு விதத்தில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இந்த பானங்களை நாம் அருந்துகிறோம்.

தேநீர் மற்றும் காபி இரண்டையும் பொறுத்தவரையில் இவை அமிலத்தன்மை கொண்டவை. இவை நமது உடலில் பல ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். இவ்வாறு நாம் இந்த தேநீர் அல்லது காப்பி அருந்துவதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீரை அருந்துவது மிகவும் அவசியம். இவ்வாறு ஒரு கிளாஸ் தண்ணீர்  அருந்துவதனால் அப்படி என்ன நடந்துவிடப் போகிறது என்று எண்ணுகிறீர்களா?வாருங்கள் பார்க்கலாம்.

பற்களில் நிறமாற்றம்

காபி மற்றும் தேநீர் இரண்டும் டானின் என்ற வேதிப்பொருள் அதிகமாக உள்ளது. இது பற்களில் நிற மாற்றத்தை ஏற்படுத்த கூடியது. காபி அல்லது தேநீர் குடிக்கும் போது, அதில் உள்ள ரசாயனங்கள் பற்களில் ஒரு அடுக்கை உருவாக்கி நிற மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே காபி அருந்தும் முன்பதாக 15 நிமிடங்களுக்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீரை குடிப்பது, அந்த அடுக்கை உருவாக்கும் வாய்ப்பை குறைக்கிறது.

நீரிழப்பு

காலையில் தேநீர் அருந்தினால் தான் நமக்கு அந்த நாளை புத்துணர்ச்சியாக இருக்கும் என நாம் எண்ணுகிறோம். நீங்கள் அவ்வாறு நினைப்பீர்கள் என்றால், அது மிகவும் தவறான ஒன்றாகும். வெறும் வயிற்றில் தேநீர் அல்லது காப்பி உட்கொள்ளும்போது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி, பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்த வழிவகுக்கிறது, எனவே தேனீர் அருந்துவதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீரை குடித்தால், நீர் இழப்பை தவிர்த்து நமது உடலில் ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருக்க உதவுகிறது.

வயிற்று புண்

காபி அல்லது தேநீர் அருந்திய பின் நாம் வயிற்றில் ஒரு எரியும் உணர்வை பெறுகிறோம். இதற்கு காரணம் என்னவென்றால் அமிலத்தன்மை தான். காப்பி மற்றும் தேநீர் pH மதிப்பு முறையே 5 மற்றும் 6 ஆகும். நீரின் pH மதிப்பு 7 ஆக இருக்கும் போது, இது நடுநிலைத் தன்மை கொண்டதாக இருக்கும். தேநீர் அல்லது காப்பி அருந்துவதற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீரை குடிக்கும் போது, அது அமில உற்பத்தியை தடுத்து வயிற்றில் புண் ஏற்படுவதை குறைக்கிறது.

அமிலத்தன்மை

காப்பி மற்றும் தேநீர் வயிற்றில் புண்களை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்துகிறது ஆனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி அதிகப்படியான காய்ச்சிய காபி அல்லது தேநீர் குடிக்கும் போது அதிக அமிலத் தன்மை கொண்டுள்ளதால், வயிற்றுப்புண்ணை உற்பத்தி செய்கிறது. அவ்வாறு உற்பத்தி செய்யும் பட்சத்தில், நாம் தேநீர் அருந்தும்  முன்பதாக ஒரு கிளாஸ் தண்ணீரை குடிக்கும் போது, அமில தன்மையை குறைத்து அதன் விளைவை நீர்த்துப்போகச் செய்து, வயிற்றுப்புண் ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது.

தேநீர் குடிக்கும் பழக்கம்

தேநீர் அல்லது காப்பி ஒரு ஆரோக்கியமான நடைமுறை அல்ல என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும். ஆனால் நாம் அதற்கு ஏதோ ஒரு விதத்தில் அடிமையாகி விடுகிறோம்.  ஆனால் நாம் அதிலிருந்து விடுபடுவது எளிதானது அல்ல. தேநீர் மற்றும் காப்பியின் பக்க விளைவுகளை குறைக்க ஒரு சுலபமான வழி தான் தேநீர் அல்லது காபி குடிப்பதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்வது. இவ்வாறு முயற்சி செய்வதன் மூலம், நாம் இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube