பூண்டை இந்த முறையில் உபயோகப்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா?

 பூண்டு குணப்படுத்தும் பல வகையான நோய்கள். பூண்டு என்பது

By leena | Published: Jul 11, 2020 06:30 AM

 பூண்டு குணப்படுத்தும் பல வகையான நோய்கள்.

பூண்டு என்பது நாம் அதிகமாக நமது சமையல்களில் பயன்படுத்தக் கூடிய ஒன்று ஆகும். இதை வெறும் உணவிற்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாக இல்லாமல், நமது உடலில் ஏற்படக் கூடிய பல வகையான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது.

தற்போது இந்த பதிவில், பூண்டை எந்தெந்த முறையில், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், அதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம்.

வயிற்று பூச்சி

பூண்டை குப்பைமேனி இலையுடன் அரைத்து, அதனை சாறு எடுத்து, அந்த சாற்றை குழந்தைகளுக்கு கொடுத்தால், வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியே வந்து விடும்.

நெஞ்சு எரிச்சல்

பூண்டையும், சிறிது உப்பையும் சேர்த்து சாப்பிட்டால், திடீரென ஏற்படும் வயிற்றுவலி, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.

தேமல்

பூண்டு மற்றும் வெற்றிலை இரண்டையும் அரைத்து, தேமல் மீது பூசி வந்தால், தேமல் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

பூச்சிவெட்டு முடி

பூண்டை பொடி செய்து, தேனில் குழைத்து தலை, புருவத்தில் பூச்சிவெட்டு முடி வளராமல் இருக்கும் இடத்தில தேய்த்து வர, முடி நன்றாக வளரும்.

Step2: Place in ads Display sections

unicc