சந்திரமுகி 2 ல் பிரபல பாலிவுட் நடிகை நடிக்கிறாரா.? படக்குழுவினர் விளக்கம்.!

சந்திரமுகி 2 ல் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக

By ragi | Published: Aug 01, 2020 01:42 PM

சந்திரமுகி 2 ல் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என்று படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.

நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் சந்திரமுகி 2. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அவரது திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களில் ஒன்றாகும். மேலும் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் ஜோதிகா மற்றும் சிம்ரன் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டது. ஆனால் அதனை அவர்கள் மறுத்து விட்டனர். அடுத்ததாக ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இது குறித்து விளக்கமளித்த படக்குழுவினர், கியாரா அத்வானி நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி என்றும், படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பின்னரே அவை யாவும் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc