நீங்கள் சாப்பிடும் மருந்து பாதுகாப்பானதா? இல்லையா? போலி மருந்துகளைச் சரிபார்க்க கியூஆர் கோடு..

போலி மருந்துகளைச் சரிபார்க்க உதவும் கியூஆர் கோடு.. விரைவில் அறிமுகம்..

நீங்கள் சாப்பிடும் மருந்துகளில் உள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில், தரமற்ற மற்றும் போலியான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க, சிறந்த மருந்து உற்பத்தியாளர்களுக்கான ‘ட்ராக் அண்ட் ட்ரேஸ்’ முறையை அரசாங்கம் விரைவில் தொடங்க உள்ளது.

அந்த வகையில் சுமார் 300 முன்னணி மருந்து தயாரிப்பாளர்கள் முதன்மை பேக்கேஜிங் லேபிள்களில் பார்கோடுகள் அல்லது கியூஆர் கோடுகளை இணைக்க வேண்டும் என அரசு உத்தரவு.

இந்த கியூஆர் கோடுகளை பயன்படுத்தி மருந்தின் சரியான மற்றும் பொதுவான பெயர், பிராண்ட் பெயர், உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி, தொகுதி எண், உற்பத்தி தேதி, காலாவதி தேதி மற்றும் உற்பத்தி உரிம எண் என அனைத்தையும் நம்மால் அறிய முடியும்.

மேலும் உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகம் முழுவதும் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 10 சதவீத மருத்துவப் பொருட்கள் தரமற்றவை அல்லது போலியானவை என தெரியவந்துள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment