சென்னையை போட்டி போட வைக்கத்தான் டாஸ்மாக் கடைகளை திறக்கிறதா அரசு ? கனிமொழி

சென்னையை போட்டி போட வைக்கத்தான் டாஸ்மாக் கடைகளை திறக்கிறதா அரசு ? கனிமொழி

சென்னையை போட்டி போட வைக்கத்தான் டாஸ்மாக் கடைகளை திறக்கிறதா அரசு ? என்று  கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த சில்லறை விற்பனை கடைகள் நாளை  முதல் திறக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. மால்கள், மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் மதுபான கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று நிர்வாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில்,பிறமாவட்ட கொரோனா பரவல் எண்ணிக்கைகளோடு சென்னையை போட்டி போட வைக்கத்தான் தமிழக அரசு சென்னையில் அவசரமாக டாஸ்மாக் கடைகளை திறக்கிறதா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Join our channel google news Youtube