நீடிக்கப்பட்டுள்ளதா நிதி ஆண்டு? மத்திய அரசு விளக்கம்!

வணிகத்திலும் பிற அமைப்புகளிலும் வருடம்தோறும் நிதி நிலையை கணக்கீடு செய்ய பயன்படுத்தப்படும் 12 மாதத்திற்கு உட்பட்ட ஒரு காலம் தான் நிதி ஆண்டு எனக் கூறப்படுகிறது. இது மார்ச் 31 ஆம் தேதியோடு முடிவடைவது வழக்கம். ஆனால், இந்த வருடம் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று சில ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சர் கூறிய போது ஒவ்வொரு ஆண்டும் போல வழக்கம் போல இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியோடு நிதி ஆண்டு முடிவடையும். 2020 மற்றும் 2021 ஆம் நிதியாண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கும் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பிப்ரவரி 1-ம் தேதியுடன் முடிந்த வாகனங்களுக்கான அனுமதி மற்றும் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். 

author avatar
Rebekal