ஊரடங்கு நீட்டிப்பதா..? தளர்வுகள் அளிப்பதா..?முதல்வர் இன்று ஆலோசனை..!

ஊரடங்கு நீட்டிப்பதா..? தளர்வுகள் அளிப்பதா..?முதல்வர் இன்று ஆலோசனை..!

  • ஜூன் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பதா..? தளர்வுகள் அளிப்பதா..? என்பது குறித்து முதல்வர் இன்று  ஆலோசனை.

தமிழகத்தில் கடந்த ஜூன்-7ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில், மேலும், ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து, ஜூன்-14-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், ஜூன் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube