தல அஜித்தின் 'வலிமை' பான்-இந்தியா திரைப்படமாக உருவாகிறதா.?

தல அஜித்தின் 'வலிமை' பான்-இந்தியா திரைப்படமாக உருவாகிறதா.?

தல அஜித்தின் வலிமை படத்தை பான் - இந்தியா திரைப்படமாக உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் மட்டுமே வெளியானதை ஒழிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தை பான் - இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தமிழில் மட்டும் உருவாகி வரும் வலிமை படத்தை தேர்ந்த டப்பிங் கலைஞர்களை வைத்து இந்தி மட்டுமில்லாமல் பல தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பணிகள் படப்பிடிப்பு முடிந்ததும் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Latest Posts

பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!
70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் - இந்தியா பதிலடி
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை- தோனி..!
மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர்!
கர்நாடக சட்டமன்றத்தில் மூன்று மணி நேரத்தில் நில திருத்த மசோதா உள்ளிட்ட  9 மசோதாக்கள் நிறைவேற்றம்
எஸ்.பி.பி யின் உடல் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.!
உலகளாவிய அமைப்பே நொறுங்கிவிட்டது - கனடா பிரதமர்!