ராதாகிருஷ்ணன் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரா..? திமுக செயலாளரா..? கரு.நாகராஜன்..!

உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு என கரு.நாகராஜன் தெரிவித்தார்.

சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில இளைஞரணியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  செயற்குழுக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் கட்சியின் தலைமை முடிவெடுக்கும்.

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அத்துறையின் செயலாளரா..?அல்லது திமுகவில் செயலாளரா..? என்று தெரியவில்லை. நீட் குழுவுக்கு எதிராக வழக்கு தொடர மாணவராகவோ, பெற்றோராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாளை நீதிமன்றத்தில் எங்கள் கருத்துகளை எடுத்துரைப்போம் என்று கூறினார்.

author avatar
murugan