#Facebook scam: இந்த வீடியோவில் இருப்பது நீங்களா? மோசடியில் சிக்காமல் உஷாராக இருங்கள்!

“அவ்வளவு அழகோ அவ்வளவு ஆபத்து இருக்கும்” என பெரியவர்கள் கூறுவார்கள். அதேபோலத்தான் சமூக வலைத்தளமும். எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவந்தாலும், அதனை ஹேக்கர்கள் எளிதாக ஹேக் செய்து விடுகிறார்கள். அந்தவகையில், கடந்த சில நாட்களாக பேஸ்புக் மெசேன்ஜர் செயலி மூலம் நடக்கும் லிங்க் ஸ்கேம் பற்றி காணலாம்.

லிங்க் ஸ்கேம்:

சைபர் பாதுகாப்பு நிறுவனமான சோபோஸ், புதிய வகையாக பேஸ்புக் மெசேன்ஜர் மூலம் மோசடி நடப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் நமது அல்லது நமது நண்பரின் பேஸ்புக் கணக்கில் இருந்து ஒரு வீடியோ லிங்கை மெஸ்சேஞ்ஜரில் அனுப்புவார்கள். அந்த லிங்கிற்குள் சென்றால், நமது யுஸர்நேம் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடுமாறு கேட்கும்.

லிங்க்கின் ட்விஸ்ட்:

இதில் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால், அந்த லிங்கில் வரும் விடியோவில் “இந்த வீடியோவில் இருப்பது நீங்களா?” (‘Is it you in the video?’) என இருக்கும். இதனால் அச்சமடைந்த நீங்கள் அந்த லிங்கிற்குள் சென்றால், உங்களின் யுஸர்நேம் மற்றும் பாஸ்வேர்டு கேட்கும். அவ்வாறு நீங்கள் அதனை உள்ளிட்டு உள்ளே சென்றால், உங்களின் பேஸ்புக் யுஸர்நேம் மற்றும் பாஸ்வேர்டை வைத்து உங்களின் அக்கவுண்ட்டை ஹேக் செய்துவிடுவார்கள். அதன் உள்நுழையிடு, பார்ப்பதற்கு பேஸ்புக் லாகின் போல இருக்கும். நீங்கள் உள்ளே சென்ற பின்னர், “there is no video” என வந்து, ஸ்கிரின் ப்ளாக்-காக மாறி, மீண்டும் அந்த லாகின் பக்கத்திற்கு அனுப்பும்.

அந்த லிங்க்கில் நீங்கள் உள்ளிடும் உங்களின் யுஸர்நேம் மற்றும் பாஸ்வேர்டை அமெரிக்காவில் குறைந்த கட்டண வலை ஹோஸ்டிங் சேவையில் இயங்கும் சேவையகத்திற்கு அனுப்பப்படும். இதன்மூலம் உங்களின் நண்பர் அல்லது அந்த லிங்கிற்குள் சென்றவர்களின் ஐடி-யை வைத்து அதில் இருக்கும் நண்பர்களுக்கு இந்த லிங்கை அனுப்புவார்கள். அதனால் இதுபோன்ற லிங்குகள் வந்தால் அதற்குள் போகாமல் இருப்பது நல்லது.

லாகின் இணைப்பு போலியானது என்பதை எப்படி அறிவது?

பேஸ்புக், தனது அனைத்து சேவைகளுக்கும் HTTPS-ஐ ஆரம்பமாக கொண்டது. எனவே HTTPS அல்லாத, வேறு வார்த்தைகள் ஆரம்பமாக வந்தால், அது போலியானது. HTTPS என்பது Hypertext Transfer Protocol Secure ஆகும். மேலும் இது SSL / TLS நெறிமுறையைப் பயன்படுத்துகிறது.

உங்களின் பேஸ்புக் அக்கவுண்ட்டை பாதுகாப்பது எப்படி?

பயனர்கள் தங்களின் பேஸ்புக் அக்கவுண்ட்டை பாதுகாக்க, two-factor authentication (TFA) முறையை பயன்படுத்த வேண்டும். நீங்கள் two-factor authentication-ஐ எனேபில் செய்தால், உங்களின் பேஸ்புக் அக்கவுண்டில் யாரும் உள்நுழைய முடியாது. அதற்கு காரணம், ஏனெனில் நீங்கள் மட்டுமே நுழையக்கூடிய பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிடுமாறு கேட்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி, நீங்கள் கணினி அல்லது லேப்டாப்பில் உபயோகிகிறீர்கள் என்றால், ஆன்டிவைரஸ் போட்டுக்கொள்வது நல்லது.