குங்குமப் பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்பது உண்மை தானா?

குங்குமப்பூ சாப்பிடுவதால் கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்பது காலம் தொட்டு சொல்லிவரகக் கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் இது உண்மைதானா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

சாஃப்ரான், கேசர், கூங் அல்லது குங்குமப்பூ என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கூடிய இந்தப் பூ சுவைக்காகவும் நிறத்திற்காகவும் பல உணவுகளில் சேர்க்கப்படுவதுடன் மட்டுமல்லாமல் இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. குறிப்பாக குங்குமப்பூ என்றாலே கர்ப்பிணிகள் பயன்படுத்துவது நல்லது என்ற ஒரு எண்ணம் தான் பலருக்கும் வரும். காரணம் கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் குங்குமப்பூ சாப்பிடுவது மிக நல்லது என பலரும் சொல்வதை நம்பி காலம் தொட்டு அதையே செய்து வருகிறார்கள் கர்ப்பிணிகள். ஆனால், உண்மையிலேயே குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தை வெள்ளையாக பிறக்குமா என்றால், கிடையாது.

குழந்தை குங்குமப்பூ சாப்பிடுவதால் வெள்ளையாக பிறக்க போவதில்லை, அது நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் காரணமாக ஏற்படக்கூடிய நிறமிகளால் தான் நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த குங்குமப்பூவில் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும், கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமாக குங்குமப் பூவை எடுத்துக் கொள்ளும் பொழுது அது அவர்களின் உயிருக்கு ஆபத்தாகக் கூட அமையும். குழந்தை வெள்ளையாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ அதிகம் எடுத்துக்கொள்வது மிகவும் ஆபத்து. ஏனென்றால், நாளொன்றுக்கு 10 கிராமுக்கு அதிகமாக குங்குமப்பூ எடுக்கக் கூடாது. அவ்வாறு செய்யும் பொழுது சில சமயங்களில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே குங்குமப் பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்ற எண்ணத்தை மாற்றி, இயற்கையான பழவகைகளை அதிகம் உட்கொள்ளுங்கள் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும்.

author avatar
Rebekal