பெண்களே கர்ப்பமாகி 3 மாதங்கள் வரை என்னென்ன சாப்பிட வேண்டும் என்று குழப்பமாக உள்ளதா ? இதை மட்டும் சாப்பிட்டா போதும் .

  • கர்ப்பிணி பெண்கள் 3 மாதங்கள் வரை சாப்பிட வேண்டிய உணவுகள்.

பெண்களை பொறுத்தவரையில் அவர்கள் கர்ப்பமாகி 3 மாதங்கள் வரை எதையும் சாப்பிடுவதற்கு  பயப்படுவார்கள். ஏனென்றால், நமக்கு முந்திய பெரியவர்கள் நீ இதை சாப்பிடக் கூடாது, அதை சாப்பிடக் கூடாது என கூறுவார்கள்.

அவ்வாறு சாப்பிட்டால் கரு களைந்து விடும் என்றெல்லாம் பயம் காட்டிஇருப்பார்கள். இதனால் பெண்கள் கர்ப்பமாகி மூன்று மதக்களுக்குள் தாங்கள் என்ன சாப்பிடுவது என்பதே அவர்களுக்கு ஒரு குழப்பமாக மாறிவிடும்.

Related image

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது.

தற்போது இந்த பதிவில் பெண்கள் கர்ப்பமாகி 3 மாதங்கள் வரை என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பது பற்றி பார்ப்போம்.

பசலைக்கீரை

கர்ப்பிணி பெண்களுக்கு கீரை வகைகள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது. அதிலும் பசலைக் கீரை கர்ப்பிணி பெண்களுக்கு பல சத்துக்களை அளிக்கக் கூடிய கீரை.

Related image

 

பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாய் மற்றும் செயின் இரத்த ஓட்டம் சீராக அமைவதற்கு உதவுகிறது.

பாதாம்

Image result for பாதாம்

பாதாம் பருப்பில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. இந்த பருப்பை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும், இந்த பருப்பில் புரோட்டின் சத்துக்கள் அதிகமாக உள்ளதால் இது உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது.

சிக்கன்

சிக்கன் கர்ப்பிணி பெண்களுக்கு, சிறந்த மற்றும் சத்தான உணவு. சிக்கனில் அதிக அளவில் இரும்பு சத்துக்கள் உள்ளது. இது கர்ப்பிணி பெண்கள் 3மாதம் வரை சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது.

Image result for சிக்கன்

இதனை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வுகளை நீக்கி, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

வெண்டைக்காய்

கர்ப்ப காலத்தில் வெண்டைக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெண்டைக்காயை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கர்ப்ப கால நீரிழிவு நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

Image result for வெண்டைக்காய்

மேலும், இந்த காயில் உள்ள ஃபோலிக் ஆசிட் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியத்தை அளிக்கிறது.

ஆரஞ்சு

கர்ப்ப காலத்தில் பழ வகைகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழ வகைகளை சாப்பிட வேண்டும். அந்த வகையில், ஆரஞ்சு பலம் கர்ப்ப காலங்களில் சாப்பிடுவதற்காக ஒரு சிறந்த பழமாக கருதப்படுகிறது.

Image result for ஆரஞ்சு

 

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கிறது.

முட்டை

Related image

முட்டை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். முட்டையில் அதிக அளவிலான புரோட்டின் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள புரோட்டின் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment