,
Seeman Et

திரைப்படத்தில் நடித்தால் மட்டுமே நாட்டை ஆளும் தகுதி வந்துவிடுமா? – சீமான் காட்டம்.!

By

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமே நாட்டை ஆள்வதற்கு தகுதியாகி விடுமா என சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 10, 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் 234 தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மூன்று மாணவர், மாணவிகளுக்கு சான்றிதழ், மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நேற்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, விஜய் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்துவது வரவேற்கத்தக்கது. ஓட்டுக்கு பணம் கொடுக்கவும் கூடாது, பெற்றுக்கொள்ளவும் கூடாது என்று எனக்கு வலு சேர்க்கும் விதமாக பேசியதை வரவேற்கிறேன்.

தம்பி விஜய் அரசியல் வந்து நல்லது செய்ய விரும்புவதை வாழ்த்துவோம், அவர் பாதை வேறு, எனது அரசியல் பாதை வேறு. நல்லது செய்வதை வரவேற்க வேண்டும், தட்டிவிடக்கூடாது. சிறந்த அரசியல் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களை ஒரு வார்டு கவுன்சிலராக கூட நம்மால் வெற்றி பெற வைக்க முடிவதில்லை.

ஆனால் திரைப்படத்தில் நடித்தால் மட்டுமே ஒரு நாட்டை, இனத்தை வழிநடத்தும் தகுதி வந்துவிட்டது என்று கூறுவது அவமானம், இது என்றும் மாறாது. நாம் தான் மாற்றவேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.