27 C
Chennai
Sunday, October 24, 2021

#Breaking:விஜயதசமியன்று கோயில்கள் திறக்க வாய்ப்புள்ளதா? – உயர்நீதிமன்றம் கேள்வி..!

வருகின்ற வெள்ளிக்கிழமையன்று(விஜயதசமி) கோயில்களை திறக்க வாய்ப்புள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,கோயில்களை வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதனால்,மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில்தான் வாரக் கடைசியில் மூன்று நாட்கள் கோயில்கள் மூடப்பட்டிருப்பதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இதனையடுத்து,வருகின்ற வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோயில்கள் திறக்க உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இந்த அவசர மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில்,வருகின்ற வெள்ளிக்கிழமையன்று கோயில்களை திறக்க வாய்ப்புள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும்,இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தைப் பெற்று மதியம் 1.30 மணிக்குள் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து,வழக்கை இன்று மதியத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

spot_imgspot_img

Hot Topics

Read More