தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறப்பது சாத்தியமா ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாகி உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு  எப்போது என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.

இந்நிலையில் நாமக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. கொரோனா சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும்.மேலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தெரிவிக்கப்படும்.ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதலமைச்சர்  பழனிசாமியுடன் பேசி 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.