நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்கள் படங்கள்.! உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்கள் புகைப்படங்கள் இருப்பது விதிமீறல் இல்லையா.? இதனை அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள் என உயர்நீதிமன்றம் கேள்வி.

இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் தங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் அல்லது நடிகர்கள் அல்லது வேறு யாருடைய புகைப்படங்களையாவது நம்பர் பிளேட்டில் பதிவிட்டு ஒட்டி வருகின்றனர்.

இது குறித்து இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். வாகன நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இருக்கிறதே அது விதிமீறல் இல்லையா.? இதனை போக்குவரத்து அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள் என சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

போக்குவரத்து வாகன சட்டங்களை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Leave a Comment