“திமுக போன்ற கட்சிகளின் பேச்சை கேட்பது நல்லதா?..வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.!

“திமுக போன்ற கட்சிகளின் பேச்சை கேட்பது நல்லதா?..வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும்” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.!

திமுக உள்ளிட்ட கட்சிகளின் பேச்சை கேட்பது நல்லதா? என்று வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்த மசோதா நேற்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்தார்.

ஆனால்,நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது.தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறிய நிலையில், குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில்,திமுக உள்ளிட்ட கட்சிகளின் பேச்சை கேட்பது நல்லதா? என்று வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“தமிழக மாணவர்களுக்கு அதிக இடம் பெற்றுத் தரும் நீட் தேர்வை வேண்டாம் என்று அரசியல், பொருளாதார காரணங்களுக்காக நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று திமுக போன்ற கட்சிகளின் பேச்சை கேட்பது நல்லதா என்று வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும்.

மேலும்,நீட் தேர்வுக்கு முன் பணத்தை வைத்துக் கொண்டு மருத்துவ கல்லூரி சீட்டுக்கு அலையும் வியாபாரச் சந்தை இருந்தது. சில தனியார் கல்லூரிகளும், மருத்துவ படிப்புக்கான சீட்டை வாங்கித்தரும் வணிகர்களே நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்”,என்று தெரிவித்துள்ளதாக தமிழக பாஜக கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube