28 C
Chennai
Thursday, December 3, 2020

தினமும் முட்டை சாப்பிடுவது ஆபத்தா .? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

தினமும் முட்டை சாப்பிடுவதன் மூலம் நீரழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் உணவுடன் முட்டை சேர்த்து சாப்பிடுவது வழக்கம் . சிலர் வேக வைத்தும் ,பாயில் செய்தும்,துருவல் செய்தும் சாப்பிடுவார்கள் . இந்த முட்டைகளை சாப்பிடுவதன் மூலம் ஏராளமான நன்மைகள் உள்ளது என்று பார்த்திருப்போம் . ஆனால் இதனால் ஆபத்தும் உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது தினமும் ஒரு முட்டையோ அல்லது கூடுதல் முட்டையை உட்கொள்பவர்களுக்கு நீரழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிகள் உள்ளது .இதனை தினமும் சாப்பிடுவதன் மூலம் நீரழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு 60% அதிகம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த முட்டை உட்கொள்வதால் ஏற்படும் நீரழிவு நோய் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தென்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் தலைமையில் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 2009 வரை சீனா மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் கத்தார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது .

கடந்த சில தசாப்தங்களாக , மக்கள் பராம்பரிய உணவுகளில் இருந்து விலகி இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவு வகைகளையே அதிகம் உட்கொள்வதாகவும் ,அதிலும் 1991-2009 காலாண்டில் முட்டை உட்கொள்பவரின் எண்ணிக்கை இரு மடங்காக சீனாவில் அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் ஜேர்னல் ஆஃப் நியூட்டிரிஷனில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

முட்டையை சாப்பிடுவதற்கும் , நீரழிவு நோய்க்கான தொடர்பை குறித்தும் ஆய்வு நடத்திய போது ,தினமும் முட்டை உட்கொள்வதன் மூலம் மனிதனின் உடலில் ஒரு நாளைக்கு 38 கிராம் மேல் வரை அதிகரித்து ,அது 25% நீரழிவு நோய்க்கான அபாயத்தை அதிகரிப்பதாக கூறியுள்ளனர்.

அதே போன்று நாளொன்றுக்கு ஒன்றுக்கும் மேலான முட்டைகளை தவறாமல் சாப்பிடுவதன் மூலம் பெரியவர்களுக்கு நீரழிவு நோய்க்கான வாய்ப்பு 60% அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் நிபுணரும் ,பொது சுகாதார நிபுணருமான மிங் லி கூறினார்.சீனாவில் பெரும்பாலான நபர்களுக்கு நீரழிவு நோய் முற்ற காரணம் அதிக முட்டை உட்கொள்வதால் தான் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .

மேலும் இந்த நீரழிவு நோய்க்கு மற்றொரு முக்கிய காரணி டயட் என்றும் கூறியுள்ளார் . இவர்கள் நடத்திய ஆய்வில் சீனாவில் உள்ள 50 வயதான 8,545 பெரியவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Latest news

ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு.. பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டட்டம்.!

சமீபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள்...

ரஜினியின் அரசியல் அறிவிப்பு.! வாழ்த்துக்களை தெரிவிக்கும் பிரபலங்கள்.!

 ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்கு கார்த்திக் சுப்பராஜ், அனிருத் ,ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு சமூக...

பாம்பனுக்கு 40 கி.மீ. தொலைவில் புரெவி.. கரையை கடப்பது எப்பொழுது?

புரெவி புயல், தற்பொழுது பாம்பனுக்கு கிழக்கு-வடகிழக்கு பகுதியில் 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த...

தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான் – களமிறங்கிய ரஜினி

ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அதற்கான தேதி டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் என நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் கூறப்பட்டு வந்தது....

Related news