கள்ளச்சாராய மரணங்களை மறைக்க தமிழை தேடி ஓடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்.
நாடு முழுவதும் ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அவரது பதிவில், 500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள் என விமர்சித்து, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை மறைக்க ஒற்றை தந்திரமே இந்த ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு என முதலமைச்சர் முக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதில் கருத்து தெரிவிக்கும் வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கள்ளச்சாராய மரணங்களை மறைக்க தமிழை தேடி ஓடுவதாக விமர்சித்துள்ளார். அண்ணாமலை பதிவில், கள்ளச்சாராயத்தால் 22 மரணங்கள், உயிர் இழப்பிற்கு காரணமானவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு, திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள், டாஸ்மாக் வருமானம் 50,000 கோடி இவை எல்லாம் மறைக்க நீங்கள் ஓடுவீர்கள் தமிழைத் தேடி. பாசமா? எல்லாம் வேஷம் என்றுள்ளார்.
கள்ளச்சாராயத்தால் 22 மரணங்கள்,
உயிர் இழப்பிற்கு காரணமானவருக்கு 50,000 ரூபாய் இழப்பீடு,
திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள்,
டாஸ்மாக் வருமானம் 50,000 கோடி,இவை எல்லாம் மறைக்க
நீங்கள் ஓடுவீர்கள் தமிழைத் தேடி.
பாசமா? எல்லாம் வேஷம்! https://t.co/94NSQO8dGs
— K.Annamalai (@annamalai_k) May 20, 2023