நம் உடலுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமா?

10
Importance of iron for human body

மனித உடல் சரியாக இயங்க அதற்கான சத்துக்கள் சரியான முறையில் கிடைக்க வேண்டும்; உடல் சரியான சத்துக்களை பெற முறையான உணவு முறை மிகவும் அவசியம். உடலுக்கு பலவித சத்துக்களின் தேவை இருந்தாலும், அனைத்திலும் முன்னிலை வகிப்பது இரும்புச் சத்தாகும். ஏனெனில் உடலின் முக்கிய செயல்கள் அனைத்திலும், உடலின் முக்கிய பாகங்கள் ஒவ்வொன்றிற்கும் இரும்புச் சத்து என்பது அவசியம் தேவை.

இந்த பதிப்பில் உடலின் இயக்கத்திற்கு இரும்புச்சத்து ஏன் அவசியம் என்பது பற்றி படித்து அறியலாம்.

இரும்புச்சத்து அவசியமா?

மனித உடல் உயிருடன் இருக்க, உடலுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க வேண்டியது அவசியம்; கிடைக்கும் ஆக்சிஜன் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சென்று அடைய வேண்டியது மிகவும் முக்கியம். இப்படி உடல் பாகங்களுக்கு ஆக்சிஜன் எடுத்துச் சென்று சேர்ப்பது உடலில் பாயும் இரத்தமாகும்.

இரத்தத்தின் அடைப்படை தேவை இரும்புச்சத்து ஆகும்; இரத்தத்தின் மூலக்கூறுகளான ஹீமோகுளோபின், மையோகுளோபின், புரதம் போன்றவை உருவாகவும், அவை ஆக்சிஜனை எடுத்து செல்லவும் இரும்புச்சத்து என்பது மிக மிக அவசியம்.

உணவுகள்

முட்டையின் வெள்ளைக்கரு, பருப்புகள், இறைச்சி, அடர் பச்சை நிற காய்கறிகள், பீன்ஸ், மீன்கள் போன்ற உணவுகளில் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது; மேலும் காஸ்ட் அயர்ன் எனும் இரும்புப்பாத்திரத்தில் சமைத்த உணவுகளில் இரும்புச்சத்து அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

உடல் எப்படி பெறுகிறது?

மனித உடல் இறைச்சி வகை உணவுகளில் காணப்படும் இரும்புச்சத்தினை விரைவில் ஈர்த்துக்கொள்ளும்; ஆனால் காய்கறி வகை உணவுகளில் காணப்படும் பிற சத்துக்களுடன் சேர்ந்து காணப்படும் இரும்புச்சத்தினை உடல் ஈர்க்க அதிக நேரத்தை எடுக்கும் அல்லது காய்களில் அதிகம் காணப்படும் பிற சத்துக்கள் இரும்புச்சத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அதன் அளவை குறைத்துவிடும். இதனால் உடல் குறைந்த அளவு இரும்புச்சத்தினை மட்டுமே பெறும்.

நோய்கள்

இரும்புச்சத்து குறைபாட்டினால் உடலில் இரத்தசோகை, குடல் நோய்கள், மலக்குடல் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படலாம்; ஆகையால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்தினை போதுமான அளவு எடுத்துக்கொள்ள முயற்சியுங்கள்!