பொடுகு தொல்லையா? கவலையை விடுங்க….! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

எலுமிச்சையில் பலவகையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

எலுமிச்சையில் பலவகையான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தற்போது இந்த பதிவில்,  எலுமிச்சைப்பழம் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

தலையில் பொடுகு உள்ளவர்கள் இந்த பொடுகை போக்குவதற்காக முயற்சி செய்வதுண்டு. அந்தவகையில் பொடுகை போக்குவதற்காக நாம் கடைகளில் கெமிக்கல் கலந்த கலவைகளை வாங்கி பயன்படுத்துவதால், நமது முடியின் ஆரோக்கியம் கெடுவதோடு பல பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.

நாம் இயற்கையான முறையில், எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காணும் பட்சத்தில், அதன் தீர்வும் மெதுவாக கிடைத்தாலும் ,நிரந்தரமான தீர்வாக காணப்படும். அந்த வகையில், தலையில் உள்ள பொடுகை நீக்குவதற்கு எலுமிச்சை பெரிதும் உதவியாக உள்ளது. அதிலும் எலுமிச்சை சாற்றை அனுதினமும் குளிக்கும் போது தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலையில் உள்ள பொடுகு எல்லாம் எளிதில் போய்விடும்.

மேலும், செயற்கையான கண்டிஷனர்களை பயன்படுத்தாமல், எலுமிச்சையின் சாற்றை தலைக்கு ஊற்றி, அலசி, பின் குளிர்ந்த நீரில் அலசினால் கூந்தல் நன்கு மென்மையாகவும், அழகாகவும், நீளமாகவும் காணப்படும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.