இரட்டை இலை விவகாரம் – அமலாக்கத்துறை விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜர்

இரட்டை இலை விவகாரம் – அமலாக்கத்துறை விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜர்

டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜர்.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜராகியுள்ளார். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆஜரானார். ஏற்கனவே இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சம்மன் அனுப்பப்பட்டால் விசாரணைக்கு ஆஜராவேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். அதன்படி, இரட்டை இலை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை டிடிவிக்கு சம்மன் அனுப்பிய நிலையில், இன்று ஆஜராகியுள்ளார்.

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டிடிவி லஞ்சம் கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்து, 50 நாட்களுக்கு மேலாக அவர் சிறையில் இருந்தார். அதன்பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று ஆஜராகியுள்ள டிடிவி தினகரனிடம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் அமலாக்கத்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியமான வழக்கறிஞர் ஒருவர் சமீபத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube