ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து எரிந்து, கடலில் மூழ்கியுள்ளது!

ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து எரிந்து, கடலில் மூழ்கியுள்ளது!

ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பலான கார்க் எனும் கப்பல் ஒன்று ஓமன் வளைகுடாவில் வைத்து தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதிலிருந்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இந்த மோதல் காரணமாக ஓமன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் சில ஆண்டுகளாக தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது. உலகின் முக்கியமான பல கப்பல்கள் செல்லக்கூடிய பாதையாகிய ஹார்முஸ் ஜலசதியில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே சர்வதேச நாடுகளின் சரக்குக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல் மீது தொடர்ந்து மர்மமான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் ஈரான் தான் என அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ஈரான் மறுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஈரான் நாட்டிற்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியுள்ளது. ஓமன் வளைகுடா பகுதியான ஹார்முஸ் ஜலசந்தியின் அருகில் உள்ள ஈரான் நாட்டின் ஜாஸ்க் துறைமுகத்தில் ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான கார்கில் போர் கப்பல் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. நேற்று அதிகாலை திடீரென இந்த கப்பலில் மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிந்து கப்பல் முழுவதும் தீ பரவி உள்ளது.

இதனை அடுத்து அங்கு இருந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டாலும், தீ கட்டுக்குள் வராததால் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் உயிர் காக்கும் ஆடைகள் அணிந்து கப்பலில் குதித்து உயிர் தப்பியுள்ளனர். இந்த தீவிபத்தில் ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல் முற்றிலுமாக தீயில் கருகி, அப்படியே கடலில் மூழ்கியுள்ளது. கப்பலில் தீ பிடித்ததற்கான காரணம் என்ன? இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்டதா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

author avatar
Rebekal
Join our channel google news Youtube