நாம் பல புதுமையான விஷயங்களுக்கு தீர்வு காண முயற்சிப்போம். அத்தகைய புதிர்களுக்கு நீங்கள் தீர்வு காணும் போது உங்களுடைய மூளையை ஆனது இன்னும் சுறுசுறுப்பாக செயல்படும். அந்த வகையில் உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்க இப்பொழுது ஒரு வாய்ப்பு வழங்குகிறோம். அதன்படி, நீங்கள் இப்பொழுது கேட்கப்பட உள்ள கேள்விக்கு 60 செகண்ட் வினாடிகளுக்குள் விடையை கண்டுபிடிக்க வேண்டும்.
ஏனென்றால் இதற்கு துப்பறியும் மூளை மிகவும் அவசியமாகும். இப்பொழுது உங்களுக்கான டாஸ்க்கை பார்க்கலாம். இதில் இரண்டு புகைப்படங்கள் உள்ளது. அதில் ஒரு புறம் தோட்டக்காரர் ஒருவர் கையில் மண்வெட்டி வைத்துக்கொண்டு நின்று கொண்டிருக்கிறார். மறுபுறம் ஒரு பெண் தனது வீட்டின் சமையலறையில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். உங்களுக்கான கேள்வி என்னவென்றால் இந்த படத்தில் யார் திருடன் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
அதை கண்டுபிடிக்க உங்களுக்கு 60 நொடிகள் மட்டுமே வழங்கப்படும். அதற்குள் நீங்கள் இதை கண்டுபிடிக்க வேண்டும். இந்த புகைப்படத்தில் இருக்கும் தோட்டக்காரர் தான் திருடர் என்று யூகித்திருந்தால் அது முற்றிலும் தவறானது. அதற்கு பதிலாக வலது புறம் இருக்கும் பெண்ணை குற்றவாளி என யூகித்திருந்தால் அது முற்றிலும் சரியான பதில். இப்பொழுது இந்த கதைக்கான விளக்கத்தை பார்க்கலாம்.
இந்த திருட்டு நடந்து கொண்டிருக்கும் பொழுது இரண்டு பேரும் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். இதையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது தோட்டக்காரர் அவர் தோட்டத்தில் இருந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது வீட்டினுள் இருந்து புகை வருவதை கண்டதாக கூறியுள்ளார். அதேபோல அந்தப் பெண்ணும் தான் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தோட்டக்காரர் வீட்டில் புகை வருவதாக கூறியது. இதை வைத்து நீங்கள் அந்த படத்தை உற்று நோக்கினால், அந்த பெண்ணிற்கு பின்னால் இருக்கக்கூடிய மேசையில் ஒரு எரிந்து போன கேக் உள்ளது தெரியும். இதை வைத்து பார்க்கையில் இந்த திருட்டு சம்பவம் நடந்த போது அந்த பெண் சமையலறை விட்டு வெளியே சென்றுள்ளார். அதனால் கேக் ஆனது சூடு தான் தாங்காமல் கருகி உள்ளது. எனவே இதிலிருந்து குற்றவாளி அந்தப் பெண் என்பதை அறிந்து கொள்ளலாம்.