நான்காவது முறையாக கோப்பையை வென்ற மும்பை! மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட சென்னை!

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டீ காக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக தொடங்க நினைத்து சில மோசமான ஷாட்களால் உடனே பெவிலியன் திரும்பினார் டீ காக் (29 ரன்கள்) தாகூர் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். ரோஹித் சர்மா (15 ரன்கள்) சாகர் பந்தில் தோனியிடம் கேட்ச் ஆனார்.

அடுத்தகாக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் (15 ரன்கள்) 11.2 ஓவரில், தாஹிர் பந்தில் அவுட் ஆனார். குர்னால் பாண்டியா (7 ரன்கள்) தாகூர் பந்தில் அவரிடமே கேட்ச் ஆனார். 14.4 ஓவரில் தாஹிர் பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து இஷான் கிஷான் 23 ரன்கள் அடித்து வெளியேறினார்.

அடுத்த விக்கெட் 18.2 ஓவரில் ஹர்டிக் பாண்டியா 16 ரன்கள் எடுத்திருக்கையில் சாகரிடம் எல்பிடபிள்யு ஆனார். ராகுல் சாகர் 18.4 ஓவரில் தனது அண்ணனான தீபக் சாகரிடம் 10 ரன்கள் எடுத்து டு டுபிலிசிஸிடம் கேட்ச் கொடுத்தார். 19.4 ஓவரில் மெக்லகன் ப்ரவோ பந்தில் 0 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

கடைசி வரை பொல்லார்ட் அவுட் ஆகாமல் 25 பந்தில் 41 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை அணி சார்பில் தீபக் சாகர் நன்றாக பந்துவீசி 4 ஓவரில், 3 விக்கெட் எடுத்து 26 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். அதில் ஒரு மெய்டன் ஓவரும் வீசியுள்ளார்.

சென்னை அணி 120 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான வாட்சன் அதிரடியாக ஆடி 59 பந்தில் 80 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் 4வது பந்தில் அவுட் ஆகி சென்னை அணி ரசிகர்களை ஏமாற்றினார்.

டுப்ளிஸிஸ் 4வது ஓவரில் 26 ரன்னில் அவுட் ஆகினார். ரெய்னா 9.2 ஓவரில் 8 ரன்னில் 8 ரன்னில் வெளியேற, 10.3 ஓவரில் ராய்டு 1 ரன்னில் பும்ப்ரா பந்தில் டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர். அடுத்து 12.4 ஓவரில் கேப்டன் தோனி 2 ரன்னில் இஷான் கிசான் பந்தில் ரன் அவுட் ஆனார்.

பிறகு 19 வது ஓவரில் 9 ரன்கள் தேவை என்கிற நிலையில் பந்து வீசினார் மலிங்கா.அந்த ஓவரில் ஒரு ரன் அவுட் கடைசி பந்தில் ஒரு விக்கெட் என அபராமாக பந்துவீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மும்பை அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற வைத்தார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment