#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு…அரண்ட பவுலர்கள்!

#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு…அரண்ட பவுலர்கள்!

பெங்களுர்க்கு எதிரான இன்றைய ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்ச்சை தேர்வு செய்தது.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணி களமிறங்கியது.

முதலில் பெங்களூரு வீரர்  பின்ச் சரியான நேரத்தில் விளையாடா தவறினாலும் அதன்பிறகு தனது அதிரடி ஆட்டத்தை துரிதப்படுத்தினார். அவருக்கு படிக்கல் உறுதுணையாக நின்றார்.

இதன்மூலமாக பெங்களூரு அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 59 ரன்களை குவித்தது.இதனைத் தொடர்ந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய  பின்ச் 31வது பந்தில் அரைசதத்தை எட்டி பிடித்தார்.ஆனால், அரைசதம் அடித்த கையோடு 52 ரன்னில் போல்ட் பந்தில் ஆவுட் ஆகிய வெளியேறினார்.

Image

அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி ரன் குவிக்கத் தடுமாறிய போது  3 ஓவர்களில் 1 பவுண்டரிகூட கிடைக்கவில்லை. இதனால், ரன் ரேட் குறைந்தது. கடைசியில் அவர் ஆட்டமும் இழந்தார். 11 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 3 ரன்களை மட்டுமே கோலி எடுத்தார் .

17வது ஓவரை ரோஹித் சர்மா பூம்ராவின் கையில் கொடுத்தும் இம்முறை பலனில்லை. காரணம் அந்த ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடித்து பந்து பறந்தது.இந்த  ஓவரிலும் பெங்களூருக்கு 18 ரன்கள் கிடைத்தது.

இந்நிலையில், படிக்கல் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார்.என்ற போதிலும் எதிர்புறம்  டி வில்லியர்ஸ் அணியின் பினிஷிங் பொறுப்பை ஏற்றார் நோக்கி வந்த பந்துக்களை சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார்.

Image

19வது ஓவரை பூம்ரா வீச அதிலும் அதிரடி காட்டிய டி வில்லியர்ஸ் 1 பவுண்டரியும் 1 சிக்ஸரும் அடித்து பறக்கவிட்டார். இதன்மூலம், 23வது பந்தில் தனது அரைசத்தையும் எட்டி டி வில்லியர்ஸ் அசத்தினார்.

கடைசி ஓவரில் துபே ஸ்டிரைக்கில் இருக்க பேட்டின்சன் ஓவர் வீச முதல் பந்தில் ரன்  கிடைக்கவில்லை அடுத்த 2 பந்துகளை சிக்ஸருக்குப் பறக்கவிட்டு துபே அதிரடி காட்டினார். அடுத்த 2 பந்துகளில் 2 ரன்கள் கிடைக்க, கடைசி பந்தை மீண்டும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டு கச்சிதமான பினிசிங்கை கொடுத்தார்  துபே.

Image

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. இன்றைய ஆட்டத்தில் டி வில்லியர்ஸ் 24 பந்துகளில் 55 ரன்களுடனும், துபே 10 பந்துகளில் 27 ரன்களுடன் களத்தில் கர்ஜித்து  ஆட்டமிழக்காமல் நின்றனர்.

அதே சமயம் மும்பை அணித் தரப்பில் போல்ட் 2 விக்கெட்டுகளும், சஹார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
kavitha
Join our channel google news Youtube