பெர்ஸ்டோ அடித்த 114 ரன்னை கூட அடிக்கமுடியாமல் 113 ரன்னில் சுருண்ட பெங்களூரு அணி

பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய போட்டியில் ஹைதிராபாத் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது  கோலாகலமாக நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் கோலி தலைமையில் பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியை ஐதராபாத்தில் எதிர் கொண்டு வருகிறது.

இதில் முதலில் ஆடிய ஐதராபாத் அணி ஆரம்பத்திலிருந்தே ருத்ர தாண்டவம் ஆட தொடங்கியது. பேர்ஸ்டோ மற்றும் வார்னர் ஆகிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். இதில் பெர்ஸ்டோ 56 பந்துகளில் 114 அடித்து சாஹல் பதில் உமேஷிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். வார்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 100 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். விஜய் சங்கர் 9 ரன்கள் அடித்து ரன் அவுட் ஆனார்.யூசுப் பதான் 6 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். 20 ஓவர்களில் 231 எனும் இமாலய இலக்கை பெங்களூரு அணிக்கு நிர்ணயித்து விட்டது ஐதராபாத் அணி.

இதனை எதிர்த்து களமிறங்கிய ஆரம்பம் முதலே தடுமாறி அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது .பார்திவ் படேல் 11 ரன்கள் அடித்து அவுட் ஆக ஏ.பி.டிவில்லியர்ஸ் 1ரன்னில் அவுட் ஆக, கேப்டன் விராட் கோலி 3ரன்னில் அவுட் ஆகினார். ஹெய்ட்மர் 9 ரன்னில் அவுட் ஆகினார். மொயின் அலி 2 ரன்னிலும், சிவம் 5 ரன்னிலும் வெளியேறினார்.பின்னர் வந்தவர்களும் நடையைக்கட்டினார்கள்.

இறுதியாக பெங்களூரு அணி 19.5  ஓவர்களில் அனைத்து  விக்கெட்டை இழந்து 113 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இதனால் ஐதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment