ஐபிஎல் 2023 தொடரில் முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
16-வது ஐபிஎல் சீசன் தொடரில் நேற்று ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியும் இதுவரை பிளேஆப் சுற்றுக்கு எந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன என த்ரில் ஆக சென்று கொண்டிருந்த நிலையில் குஜராத் அணி அதனை நேற்று உடைத்துள்ளது.
நேற்று நடந்த போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் குஜராத் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் 101 ரன்களும், சாய் சுதர்சன் 47 ரன்களும் குவித்தனர். ஹைதராபாத் சார்பில் புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்கள் எடுத்தார்.
இதையடுத்து 189 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணி 154 ரன்கள் மட்டுமே குவித்து 34 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியைத்தழுவியது. ஷமி மற்றும் மோஹித் சர்மா தலா 4 விக்கெட்களை அள்ளினர். இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி முதல் அணியாக நடப்பு ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இன்னும் 3 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு செல்வதற்கு, மீதமுள்ள அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றன. மேலும் ஹைதராபாத் அணி 3-வது முறையாக பிளேஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவற விட்டுள்ளது.</
𝗣𝗹𝗮𝘆𝗼𝗳𝗳𝘀 𝗦𝗽𝗼𝘁 𝗦𝗲𝗮𝗹𝗲𝗱! ✅
Presenting the first team to qualify for the #TATAIPL playoffs! #GTvSRH
𝗚𝗨𝗝𝗔𝗥𝗔𝗧 𝗧𝗜𝗧𝗔𝗡𝗦 👏🏻👏🏻 pic.twitter.com/1std84Su6y
— IndianPremierLeague (@IPL) May 15, 2023
p>