இன்று ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம்.. ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாக வாய்ப்பு..?

இந்தியாவில்கொரோனா வைரஸ் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த

By murugan | Published: Aug 02, 2020 01:15 PM

இந்தியாவில்கொரோனா வைரஸ் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த முடிவு செய்தது.

அதன்படி போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் தொடர்பான நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், ஐபிஎல் போட்டியின் அட்டவணை மற்றும் ஸ்பான்சர்களை குறித்து விவாதிக்கலாம் என கூறப்படுகிறது.

செப்டம்பர் 19 முதல் போட்டி தொடங்கும் என்பதால், இந்த நேரத்தில் புதிய ஸ்பான்சர்களை ஒப்பந்தம் செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் போட்டியில் விவோ ஸ்பான்சர்ஷிப்பை கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ .1,199 கோடிக்கு ஐந்தாண்டு ஒப்பந்தம் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc