ஐபிஎல் தொடரின் இன்றைய KKR vs RR போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, கொல்கத்தா அணியில் முதலில் ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ் களமிறங்கி இன்னிங்ஸைத் தொடங்கி வைத்தனர். ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில் இருவரும் ஆட்டமிழக்க, வெங்கடேச ஐயர் களமிறங்கி பவுண்டரிகள், சிஸேர்கள் அடித்து அரைசதம் கடந்தார். முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். தொடர்ச்சியாக விளையாடிய நிலையில் மறுபுறம் இருந்த பட்லர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாளுடன் இணைந்து பொறுப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். முடிவில் ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 151 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 48 ரன்களும் குவித்துள்ளனர்.