31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

#IPL BREAKING: கோலி, டு பிளெசிஸ் அதிரடி ஆட்டம்..! பெங்களூரு அணி அபார வெற்றி..!

ஐபிஎல் தொடரின் இன்றைய SRH vs RCB போட்டியில், பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஹைதராபாத்தில் உள்ள  ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற பெங்களூருஅணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி ஆட்டமிழக்க, கேப்டன் மார்க்ரேம் மற்றும் கிளாஸன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய கிளாஸன் 49 பந்துகளில் சதம் அடிக்க, ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 187 ரன்கள் என்ற வெற்றி இலக்கில் பெங்களூரு அணியில் முதலில் களமிறங்கிய விராட் கோலி, டு பிளெசிஸ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் கடந்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 62 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு சதமடித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் டு பிளெசிஸ், நடராஜன் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் மற்றும் பிரேஸ்வெல் இணைந்து வெற்றி இலக்கை எட்டச்செய்தனர். முடிவில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 100 ரன்களும், டு பிளெசிஸ் 71 ரன்களும் குவித்தனர்.