38 C
Chennai
Sunday, June 4, 2023

ஒடிசாவில் இருந்து கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை..முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவு.!!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முந்தினம் இரவு மூன்று...

Spam call தொல்லை: அதிரடி காட்டிய TRAI…2 மாதத்தில் வருகிறது ‘DCA’ டிஜிட்டல் தளம்.!

ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக,...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில்...

#IPL BREAKING: பஞ்சாப் பந்துவீச்சில் மிரண்டது டெல்லி..! 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

ஐபிஎல் தொடரில் இன்றைய DC vs PBKS போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட பரபரப்பான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்ற நிலையில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் டெல்லி அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, பஞ்சாப் அணியில் முதலில் பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். இதில் ஷிகர் தவான் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் எனப் பறக்கவிட்டு 63 பந்துகளில் சதமடித்து அசத்தினார். முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியில் முதலில் களமிறங்கிய, டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் நல்லத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். ஒருபுறம் வார்னர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில், மறுபுறம் பிலிப் சால்ட் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரையடுத்து, களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் களத்தை விட்டு வெளியேறினர். அதன்பின் ஹக்கிம் கான், பிரவீன் துபே ஜோடி பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதனால் பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 54 ரன்களும், பிலிப் சால்ட் 21 ரன்களும் குவித்துள்ளனர். பஞ்சாப் அணியில் ஹர்ப்ரீத் ப்ரார் தனது சிறப்பான பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளையும், நாதன் எல்லிஸ் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்த போட்டியின் சிறந்த வீரராக பிரப்சிம்ரன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.