ஐபிஎல் 2023 பிளேஆஃப் ரேஸ்: 6 அணிகள் இடையே கடும் போட்டி…எந்த அணிகள் டாப்-4இல்.!

ஐபிஎல் பிளேஆப் ரேஸில் இன்னும் 3 இடங்களுக்கு 6 அணிகள் இடையே இருக்கும் வாய்ப்புகளை இங்கே பார்க்கலாம்…

ஐபிஎல் 2023 தொடர் இதுவரை இல்லாத அளவு இறுதிக்கட்ட போட்டிகள் ஒவ்வொன்றும் த்ரில் ஆக சென்று கொண்டிருக்கிறது, லீக் சுற்று போட்டிகள் நாளையுடன் நிறைவு பெறுகிற நிலையில் இன்னும் பிளேஆப் சுற்றுக்கு ஒரே ஒரு அணி(குஜராத்) மட்டுமே இதுவரை தகுதி பெற்று, இன்னும் 3 இடங்களுக்காக 6 அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

ஐபிஎல் பிளேஆப் ரேஸில் இருந்து ஹைதராபாத், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் அதிகாரபூர்வமாக வெளியேறிய நிலையில் பஞ்சாப் அணியை தவிர மற்ற இரு அணிகள் பிளேஆப் சுற்றுக்கு செல்ல இருக்கும் வாய்ப்புகளை தவிடுபிடியாக்க முடியும் என்பதால் இந்த வார இறுதிப் போட்டிகளுக்கு சுவாரசியம் அதிகரித்துள்ளது.

தற்போது எந்தெந்த அணிகளுக்கு பிளேஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புகள் இருக்கிறது என்பதையும், எந்த அணிகளின் வெற்றி/தோல்வி முடிவுகள் குறிப்பிட்ட அணிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK):

எம்.எஸ்.தோனியின் தலைமையிலான சென்னை அணி இன்று டெல்லிக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது. சென்னை அணியைப் பொறுத்தவரை புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளுடன்(NRR +0.381) 2-வது இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் நேரடியாக பிளேஆப் சுற்றுக்கு சென்றுவிடும், இரண்டாவது இடத்திற்கு செல்லவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

CSK
Image source ipl20com

ஒருவேளை டெல்லி அணி வெற்றி பெற்றால் கூட சென்னை அணிக்கு மற்றொரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது லக்னோ, பெங்களூரு அல்லது மும்பை எதாவது ஒரு அணி தோல்வியை சந்திக்க வேண்டும்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்(LSG):

லக்னோ அணிக்கும் கிட்டத்தட்ட சென்னை அணியின் நிலைமை தான், வரும் போட்டியில் கொல்கத்தாவிற்கு எதிராக மிகப்பெரிய ரன்ரேட் விகிதத்தில் வெல்ல வேண்டும். தற்போது 15 புள்ளிகளுடன்(NRR +0.304) 3-வது இடத்தில் இருக்கிறது.

LSG Won
LSG Won Image Source IPLT20

லக்னோ அணி ஒருவேளை லக்னோ அணி தோல்வியடைந்தாலும் பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பு சென்னை, பெங்களூரு அல்லது மும்பை அணிகளில் ஒரு அணி தோல்வியைப் பொறுத்து அமையும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB):

14 புள்ளிகளுடன்(NRR +0.180) 4-வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணிக்கு ரன்ரேட் தான் மிகப்பெரிய பலம் மற்றும் தேவைப்படும் ஒன்றாக இருக்கப்போகிறது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் பெங்களூரு அணி பிளேஆப்-க்கு சென்று விடும், அதேநேரத்தில் மும்பை அணி மற்றும் ஹைதராபாத் போட்டியில் மும்பை அணி மிகப்பெரிய ரன்ரேட் விகிதத்தில் வெற்றி பெறக்கூடாது.

RCB IPLQC
RCB IPLQC Image TwitterRCB

இது தவிர சென்னை (ம) லக்னோ அணி தோல்வி அடைந்தால் பெங்களூரு அணி வெற்றி பெரும் பட்சத்தில் 2-வது இடத்திற்கே முன்னேறிவிடும். ஒருவேளை பெங்களூரு அணி தோற்றாலும், வாய்ப்பு இருக்கிறது. மும்பை அணியும் தோல்வி அடைய வேண்டும், அதேநேரத்தில் கொல்கத்தா அணி,  லக்னோவை மிகப்பெரிய ரன்ரேட் விகிதத்தில் வெற்றி பெறவேண்டும்.

மும்பை இந்தியன்ஸ்(MI):

14 புள்ளிகளுடன்(NRR -0.128) 6-வது இடத்தில் இருக்கும் மும்பை அணி ஹைதராபாத்துக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டும், அதே நேரத்தில் சென்னை, லக்னோ, பெங்களூரு அணிகளில் ஒரு அணி தோல்வி அடைய வேண்டும். இது நடந்தால் 5 முறை சாம்பியன் மும்பை அணிக்கு பிளேஆப் கனவு நனவாகும்.

MI IPL QC
MI IPL QC Image TwitterIPL

சென்னை, லக்னோ, மற்றும் பெங்களூரு அணிகள் தங்களது கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்து, மும்பை அணி வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்திற்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ்(RR):

ராஜஸ்தான் அணி தனது அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடி முடித்த நிலையில் 14 புள்ளிகளுடன்(NRR +0.148) 5-வது இடத்தில் இருக்கிறது. தற்போது அந்த அணி மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

RR IPL QC
RR IPL QC Image TwitterIPL

மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் தங்களது கடைசி போட்டியில் தோல்வி அடைந்தால் ராஜஸ்தான் அணிக்கு பிளேஆப் கதவு திறக்கப்படும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR):

கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன்(NRR -0.256) 7-வது இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா அணி, லக்னோவிற்கு எதிராக இன்று நடைபெறும் போட்டியில் மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும், அதேநேரத்தில் மும்பை, பெங்களூரு அணிகள் மிகப்பெரும் ரன்ரேட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் மட்டுமே கொல்கத்தா அணிக்கு பிளேஆப் வாய்ப்பு என்பது கைகூடும்.

KKR IPL QC
KKR IPL QC Image TwitterKKR

இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களிலும் எப்படியும் ஐபிஎல் பிளேஆப்-க்கு எந்தெந்த அணிகள் செல்லும் என்பதை தெளிவாக்கிவிடும் என்பதால் லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் இவ்வளவு பரபரப்பிற்கு மத்தியில் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப்போகிறது.

author avatar
Muthu Kumar