IPL 2023: ஐபிஎல் 2023க்கான மினி ஏலம்! வெளியான வீரர்களின் விவரம்.! 

ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கான வெளியான வீரர்களின் விவரம் மற்றும் அடிப்படை விலை.

டிச-23 அன்று நடைபெற இருக்கும், ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலத்தில் 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் சில வீரர்களை தக்கவைத்தும் விடுவித்து உள்ளது, அந்த வீரர்களும் இந்த ஏலத்தில் பங்குபெறுகின்றனர்.

குறிப்பிடத்தக்க வகையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் தனது பெயரை ஐபிஎல் மினி ஏலத்திற்காக ரூ.1 கோடி அடிப்படை விலையில் சேர்த்துள்ளார். மற்றும் ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் இந்தமுறை ஐபிஎல்லில் தனது பெயரை கொடுக்க முன்வரவில்லை.

இஎஸ்பிஎன் கிரிக் இன்போ வெளியிட்டுள்ள தகவலின்படி, 21 வெளிநாட்டு வீரர்கள் ரூ.2 கோடி அடிப்படை விலையில் தங்களது பெயரை பதிவிட்டுள்ளனர், இதில் ஒரு இந்தியரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.2 கோடி அடிப்படை விலை: நாதன் கூல்டர்-நைல், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், டாம் பான்டன், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ஜேமி ஓவர்டன், கிரேக் ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், கேன் வில்லியம்சன், ரிலீ ரூசோவ், ரஸ்ஸி வான் டெர் டசென், ஏஞ்சலோ மேத்யூஸ், நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர்

ரூ.1.5 கோடி அடிப்படை விலை: சான் அப்பாட், ரிலே மெரிடித், ஜே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஷகிப் அல் ஹசன், ஹாரி புரூக், வில் ஜாக்ஸ், டேவிட் மலான், ஜேசன் ராய், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட்

ரூ.1 கோடி அடிப்படை விலை: மயங்க் அகர்வால், கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே, முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆண்ட்ரூ டை, ஜோ ரூட், லூக் வூட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், மார்ட்டின் கப்தில், கைல் ஜேமிசன், மேட் ஹென்றி, டாம் லாதம்,  டேரில் மிட்செல், ஹென்ரி கிளாசென், தப்ரைஸ் ஷம்சி, குசல் பெரேரா, ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷாய் ஹோப், அகேல் ஹொசைன், டேவிட் வைஸ்

author avatar
Muthu Kumar

Leave a Comment