ஐபிஎல் 2021:கொரோனா அச்சம் காரணமாக சொந்த நாடுகளுக்கு செல்ல நினைக்கும் வீரர்கள் தாராளமாக செல்லலாம்-பிசிசிஐ …!

கொரோனா அச்சம் காரணமாக சொந்த நாடுகளுக்கு செல்ல விரும்பும் வெளிநாட்டு வீரர்கள் தாராளமாக செல்லலாம். இருப்பினும், திட்டமிட்டப்படி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிராமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது.மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் தனது குடும்பத்திற்கு ஆதரவு அளிக்க விரும்புவதாக எண்ணி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.மேலும்,ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் பெங்களூர் அணி வீரர்களான ஆடம் ஸாம்பா,கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் தனிப்பட்ட காரணத்திற்காக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால்,தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி,கொரோனா அச்சம் காரணமாக சொந்த நாடுகளுக்கு செல்ல விரும்பும் வெளிநாட்டு வீரர்கள் தாராளமாக செல்லலாம்,அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தில் பிசிசிஐ தலையிடாது என்றும்,இருப்பினும் திட்டமிட்டப்படி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.