IPL 2021: ஹர்பஜன், ஸ்டீவ் ஸ்மித் உட்பட முக்கிய வீரர்கள் விடுவிப்பு.. எந்தெந்த அணியில் யார் யார்?

உலகளவில் கொரோனா பரவலுக்கும் மத்தியில் ரசிகர்களின்றி, 2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள், அமீரகத்தில் நடைபெற்றது. இதுவரை நடந்த ஐபிஎல் வரலாற்றில் 2020 ஆம் நடந்த ஐபிஎல் போட்டிகள் போல எந்த போட்டியும் இருந்ததில்லை. தற்பொழுது 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

அந்தவகையில், ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அந்தந்த அணியினர், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங், மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் உட்பட முக்கிய வீரர்கள், அவர்கள் இருந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும், எந்தெந்த அணியில் இருந்து யார் யார் விடுவிக்கப்பட்டனர் என்பது குறித்து காணலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஷேன் வாட்சன் (ஓய்வு), பியூஷ் சாவ்லா, கேதார் ஜாதவ், முரளி விஜய், ஹர்பஜன் சிங், மோனு குமார் சிங்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, குர்கீரத் மான், கிறிஸ் மாரிஸ், ஷிவம் துபே, டேல் ஸ்டெயின், பார்த்திவ் படேல், உடானா, உமேஷ் யாதவ், பவன் நெகி.

மும்பை இந்தியன்ஸ்:

லசித் மலிங்கா, மிட்ச் மெக்லனான், ஜேம்ஸ் பேட்டின்சன், கூல்டர் நைல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், பிரின்ஸ் பால்வந்த் ராய், திக்விஜய் தேஷ்முக்.

டெல்லி கேபிடல்ஸ்:

கீமோ பால், சந்தீப் லாமிச்சானே, அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய், மோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

சஞ்சய் யாதவ், பவன்கா சந்தீப், பில்லி ஸ்டேன்லேக், ஃபேபியன் ஆலென், ஒய் பிரித்வி ராஜ்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

டாம் பாண்டன், கிறிஸ் கிரீன், சித்தேஷ் லேட், நிகில் நாயக், எம் சித்தார்த், ஹாரி கர்னி.

கிங்ஸ் லவன் பஞ்சாப்:

கிளென் மேக்ஸ்வெல், ஷெல்டன் காட்ரெல், கே கௌதம், முஜீப் உர் ரஹ்மான், ஜிம்மி நீஷம், கருண் நாயர் மற்றும் கார்டஸ் விலிஜோன்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித், அன்கித் ராஜ்புத், ஒஷேன் தாமஸ், ஆகாஷ் சிங், வருண் ஆரோன், டாம் கரண், அனிருதா ஜோஷி, ஷஷாங் சிங்.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் ஏலம் இன்னும் சற்று நாட்களில் தொடங்கவுள்ளதால் விடுவிக்கப்பட்ட வீரர்களை எந்த அணி வாங்கப்போகிறது என்பது குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு, அதிகளவில் உள்ளது.