IPL 2021: ஏலம் போகாத ஆஸ்திரேலிய கேப்டன்.. முக்கிய வீரர்களின் பட்டியல் இதோ!

ஆஸ்திரேலிய வீரரான ஆரோன் பிஞ்ச்சின் அடிப்படை தொகையாக ரூ.2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். இவரை எடுக்க எந்த அணியும் முன்வராத காரணத்தினால், அவர் விற்காமல் போனார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி கேப்டனாக விளங்குபவர், ஆரோன் பிஞ்ச். இவர் ஆஸ்திரேலியா அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் சென்னை, கொல்கத்தா அணியை தவிர மற்ற அனைத்து அணிக்காகவும் ஆடியுள்ளார்.

இதுவறை 87 போட்டிகள் ஆடிய பின்ச், 2005 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த முறை பெங்களூரு அணியில் இருந்த இவர், 12 போட்டிகள் விளையாடி 268 ரன்கள் குவித்தார். இந்தாண்டு ஐபிஎல் தொடரின் ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில், இவரை அடிப்படை தொகையாக ரூ.2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார்.

இவரை எடுக்க எந்த அணியும் முன்வராத காரணத்தினால், அவர் விற்காமல் போனார். இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். இவர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஸ் லிக்கில் விட்ட்டோரியா அணியில் இருந்துள்ளார். இந்தாண்டு நடந்த தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய பின்ச், 179 ரன்கள் அடித்து, 113.29 ஸ்ட்ரைக் ரேட்-ஐ கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் இவரை எந்த அணியும் எடுக்க முன்வராதாக கூறப்படுகிறது. பின்ச் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா வீரர்களான லபுஸ்சேன், மேத்யூ வேட், அலெக்ஸ் கேரி உள்ளிட்ட வீரர்களை எந்த அணியும் முன்வரவில்லை.